வியாழன், 1 செப்டம்பர், 2016

கொடுத்தல்

இருப்பதால் கொடுக்கிறான்
ஒருவன்
இயன்றதை கொடுக்கிறான்
ஒருவன்

கொடுத்தல் என்பது
நிகழத்தான் செய்கிறது
மனிதர்களாலும்
மனிதர்களை போன்றோராலும்

அடிபட்ட இடத்தில்
அலட்சியம் செய்தவன்
அன்பளிப்பு செய்கிறான்
ஆஸ்பத்திரிக்கு

தீராப்பசியில்
தின்றுகொண்டிருந்தவன்
அருகில் வந்த நாய்க்கும்
அமரவைத்து சோறு போட்டான்

சனி, 20 ஆகஸ்ட், 2016

காதல் செய்


ஆகாயம் தாங்காத மேகங்கள் இல்லை மேகங்கள் பொய்த்தால் ஈரங்கள் எங்கே? வலிகளை சுமக்கின்ற காதல்கள் தானே புதுமைகள் சொல்லும் புரட்சிகள் மூட்டும் வலிகளை ஏற்று தோள்களில் தாங்கு மேகத்தை போன்று தூரத்தில் இல்லை காதலின் வெற்றி கைக்கெட்டும் நீளம்..

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

எதிர்காலம்

நாளையிளந்த சின்ன பூக்கள் 
நாட்டையாளுமாம் 
என்று கூவிக்கூவியே 
நாட்டை கூறு போடுறார் 
என்று தீரும் பொய்முகங்கள் 
போடும் கூத்துக்கள் 
அன்று பொழியும் இங்கு வந்து
மாரிமேகங்கள்!